இஸ்லாமியர்களின் பண்டிகளைகளில் மிக முக்கியானது ரம்ஜான்.
ரமலான் மாத தொடக்கத்தில் வானில் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். நோன்பு முடிந்து மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் இருக்க வேண்டும். பிறை கணக்குப்படி 29 அல்லது 30 நாட்கள் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பர். வானில் பிறை பார்த்து நோன்பு தொடங்கப்படும் நிலையில் இன்றும் நமலான் நோன்பு தென்படவில்லை.
தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு நாளை ( மார்ச் 24) முதல் தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை எப்போது சவுதி அரேபியாவுக்கு மறுநாள் நோன்பு தொடங்கும். அதன்படி சவுதி அரேபியாவில் இன்று ( மார்ச் 23) நோன்பு தொடங்கப்படுகிறது. ஆகையால், தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுத்தீன் முகமது ஆயுப் வெளியிட்ட அறிவிப்பில், “ரமலான் மாதப்பிறை நேற்று தமிழ்நாட்டில் எங்கும் தென்படவில்லை. இதனால் ரமலான் நோன்பு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.