ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ..

by Editor News

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த 2018 – 2021 ஆண்டுகளில் விளையாடி கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் டிம் பெயன். கீப்பராக செயல்பட்ட டிம் பெய்ன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக 23 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமையேற்றுள்ளார். இந்த போட்டிகளில் 11 முறை ஆஸ்திரேலிய அணி வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் பெற்றது. 4 போட்டிகள் தோல்வியில் முடிந்தன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மறு சீரமைப்பில் டிம் பெய்ன் முக்கிய பங்காற்றியதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

38 வயதாகும் டிம் பெயன் கடந்த சில மாதங்களாக உள்ளூர் போட்டிகளில் டாஸ்மேனியா அணிக்காக விளையாடி வருகிறார். வரும் வெள்ளியன்று நடைபெறவுள்ள போட்டியுடன் டிம் பெய்னின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறது. பெண் பணியாளர் ஒருவருக்கு தகாத மெசேஜ்களை அனுப்பினார் என்ற குற்றச்சாட்டுக்கு டிம் பெய்ன் ஆளாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெய்னின் அதிகபட்ச ஸ்கோர் 92 ரன்கள். சராசரி 32.63. மேலும் அவர் 35 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்று பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தொடரை டிம் பெய்ன் வழி நடத்தினார். 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டிம் பெய்ன் விலகிய பின்னர் பாட் கம்மின்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Related Posts

Leave a Comment