இட்லி பொடி …

by Editor News

தேவையான பொருட்கள் :

உருட்டு உளுந்து – 100 கிராம்

கடலை பருப்பு – 100 கிராம்

துவரம் பருப்பு – 50 கிராம்

பொட்டு கடலை – 50 கிராம்

வெள்ளை எள்ளு – 50 கிராம்

மிளகாய் வத்தல் – தேவையான அளவு

மிளகு, சீரகம் – தலா 1 ஸ்பூன்

பெருங்காய தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – 5 கொத்து

செய்முறை :

வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் உளுந்து, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பொட்டு கடலை, எள்ளு, மிளகாய் வத்தல், மிளகு சீரகம் அனைத்தையும் தனிதனியாக போட்டு வறுத்துக் கொள்ளவும்.

இறுதியாக கறிவேப்பிலையையும் சேர்த்து அனைத்தையும் ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைக்க வேண்டும்.

வறுத்து வைத்த பொருட்கள் நன்று ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்பு 1 ஸ்பூன் உப்பு கலந்து மிக்ஸியை 2 சுத்து அரையவிட்டு எடுக்கவும்.

பின்பு அரைத்து வைத்த இட்லி பொடி டப்பாவில் எடுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்… எண்ணெய் சேர்க்கப்படாததால் 3 மாதங்கள் வெளியே வைத்தாலும் கெட்டுப்போகாத இட்லி பொடி தயார்..

Related Posts

Leave a Comment