2023-2024 தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் ..

by Editor News

2023-24ம் நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தார். பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததும், சசபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஏப். 21ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 23ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்குகிறது. பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் மார்ச் 21ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 28 ஆம் தேதி முதல் பல்வேறு துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

Related Posts

Leave a Comment