ஆபாச வீடியோ விவகாரம் ..பாதிரியார் கைது

by Editor News

கன்னியாக்குமரியில் உள்ள தேவாலயம் ஒன்றில் 27 வயதான இளம் பாதிரியார் பெனடிக்ட் அன்றோ என்பவர் சேவை செய்து வந்துள்ளார். திருமணம் செய்து வைத்த அந்த பெண்ணோடு பாதிரியார் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மீது மேலும் சில பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் அவரை பாதிரியார் பொறுப்பிலிருந்து திருச்சபை நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியானது. போலீஸார் விசாரணை மேற்கொள்ள தொடங்கிய நிலையில் பாதிரியார் பெனடிக்ட் தலைமறைவானார். அவரை தொடர்ந்து தேடி வந்த போலீஸார் நாகர்கோவிலில் பதுங்கியிருந்த அவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே வேறு சில பெண்களுடன் அவர் இருந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Related Posts

Leave a Comment