தேவையான பொருட்கள் :
முட்டை – 4.
மிளகு தூள் – 1 ஸ்பூன்.
உப்பு – 1 ஸ்பூன்.
வெங்காயம் – 1.
கேரட் – 1.
சீஸ் போதுமான அளவு.
செய்முறை :
முதலில் வெங்காயம், கேரட்டினை நன்கு சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் மிக்ஸிங் கோப்பை ஒன்றை எடுத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலந்துக் கொள்ளவும்.
தொடர்ந்து இதனுடன் மிளகு தூள், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
தற்போது தோசை சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் தேய்த்து சூடேற்றவும். சட்டி நன்கு காய்ந்ததும் இதில் கலந்து வைத்த முட்டை சேர்மத்தை பரவலாக ஊற்றிக்கொள்ளவும். பின்னர் இதன் மீது போதுமான அளவு சீஸ் சேர்த்து, தவா (அ) சட்டியில் இருந்து எடுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து இதேபோன்று மீதம் இருக்கும் முட்டை சேர்மத்தையும் பல முட்டை அடைகளாக சுட்டு ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிக்கொள்ளவும். பின்னர் இந்த முட்டை அடைகளை உருட்டி பின் போதுமான அளவு (வட்ட வடிவ சிறு துண்டுகளாக) வெட்டிக்கொள்ள கொரியன் ‘Egg Roll’ தயார். சுட சுட ஒரு தட்டில் வைத்து பரிமாற வேண்டியது தான் ..!