தேவையான பொருட்கள்
மட்டன் மூளை – 5
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
சீரக தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 2 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு கொத்தமல்லி,
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
* மட்டன் மூளையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் அதில் மட்டன் மூளையை போட்டு அதனுடன் 1/2 டீஸ்பூன், சிறிது உப்பு போட்டு 5 நிமிடம் வேகவிடவும். பிறகு தண்ணீரில் இருந்து எடுத்து, அதில் உள்ள நரம்புகளை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
* தக்காளி குழைய வதங்கி எண்ணெய் பிரிந்தது வரும் போது அதில் நறுக்கிய மட்டன் மூளையை சேர்த்து கலந்து, அதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
* பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
* தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்ததும் இதில் சிறிது அளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் மட்டன் மூளை மிளகு மசாலா தயார்.