இன்று மிருத்யுஞ்ஜய பிரதோஷ விரதம்

by Editor News

திதிகளில் 13-வது திதி திரயோதசி. இந்த திதி தினத்தை பிரதோஷ தினம் என்பார்கள். வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமும் வரும். பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து நந்தியையும் சிவனையும் வழிபட வேண்டும்.

இன்று (ஞாயிறு) பிரதோஷ தினமாகும். இன்று பிரதோஷ விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்துக்கு மிருத்யுஞ்ஜய பிரதோஷ விரதம் என்று பெயர். இந்த பிரதோஷ விரதம் மரணபயத்தை நீக்கும். ஆயுளை நீட்டிக்கும். இன்று காலை முதல் விரதமிருந்து மாலையில் சிவன் கோவிலுக்குச் சென்று வணங்குவதால் துன்பங்கள் நீங்கும்.

நோயால் அவதிப்படுபவர்கள் கோவிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும், மாலையில் பூஜை அறையில் ஒரு விளக்கேற்றி வைத்து, சிவபெருமானை எண்ணி மிருத்யுஞ்ஜய மந்திரத்தைச் சொல்லி வழிபடுவதால் நோய்கள் அகலும். கடன் தொல்லைகள் நீங்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றைய வழிபாடுகள் மூலம் சூரியனின் அருளையும் பெற முடியும்.

Related Posts

Leave a Comment