ரோஹித் சர்மா தலைமையிலான ஆஸி.க்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டி …

by Editor News

விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் களத்தில் இறங்க உள்ளனர். முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டியில் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி இழந்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 39.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளர்கள் முகமது சமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் 75 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

கடந்த சில மாதங்களாக ரன்களை குவிக்க முடியாமல் ராகுல் கிணறி வந்த நிலையில், அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ள 2-ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பதால், ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் விளையாடாமல் இருந்தார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட்ட நிலையில், 2-ஆவது போட்டியில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி அனைத்து தரப்பிலும் வலிமையாக இருப்பதால் விசாகப்பட்டின போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். கடைசி மற்றும் 3-ஆவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22 ஆம் தேதி புதன் கிழமை நடைபெறவுள்ளது. ஒரு நாள் போட்டிகள் அனைத்தும் பகல் இரவு ஆட்டங்களாக நடத்தப்படுகின்றன.

Related Posts

Leave a Comment