தேவையான பொருட்கள் :
ராகி – 1 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 5 1/2 கப்
வரகு அரிசி – 1/4 கப்
தயிர் – 1/2 கப்
செய்முறை :
1. முதலில் ராகி மாவை மூன்று கப் தண்ணீர் கலந்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
2. மறுநாள் ராகி மாவு நன்கு ஊறியிருக்கும். அதுதான் கூழின் சுவைக்குக் காரணம்.
3. அதை குக்கரில் அப்படியே தண்ணீரோடு மாற்றுங்கள். அதில் வரகு அரிசி , தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. அத்துடன் 2 கப் தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். கரண்டியை வைத்து நன்குக் கலக்க வேண்டும். இப்போது குக்கரை மூடிவிடுங்கள்.
5. குறைந்த தீயில் மூன்று விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள். பிரெஷர் முற்றிலும் இறங்கியதும் விசிலை நீக்கிவிட்டு குக்கரைத் திறக்க வேண்டும்.
6. தற்போது மத்து வைத்து நன்கு மசிக்க வேண்டும்.அதேசமயம் தயிர் சேர்த்து மீண்டும் மத்தில் கடைந்து நன்றாக கலக்குங்கள்.
7. கூழ் கட்டியாக இருந்தால் மோர் சேர்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதில் வெங்காயமும் சேர்த்துக்கொள்ளலாம்.
8. இதற்கு சைட்டிஷாக ஊறுகாய், மோர் மிளகாய், வடகம் பொருத்தமாக இருக்கும்.