ஃபேஸ்புக் தளத்தை நிர்வகிக்கக் கூடிய மெடா நிறுவனமானது, 11,000 ஊழியர்களை கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பணிநீக்கம் செய்து எல்லோருக்கும் பேரதிர்சியை கொடுத்தது. அதைத் தொடர்ந்து, ஊழியர்களை புதிதாக நியமனம் செய்கின்ற நடவடிக்கை எதையும் ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ளவில்லை.
தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கடந்த ஆண்டின் இறுதிக்காலம் இருண்டதாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குறிப்பாக டிவிட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் போன்ற சமூக வலைதளங்களில் பணியாற்றிய எண்ணற்ற ஊழியர்கள் கடந்த ஆண்டின் இறுதியில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அதில் ஃபேஸ்புக் தளத்தை நிர்வகிக்கக் கூடிய மெடா நிறுவனமானது, 11,000 ஊழியர்களை கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பணிநீக்கம் செய்து எல்லோருக்கும் பேரதிர்சியை கொடுத்தது. அதைத் தொடர்ந்து, ஊழியர்களை புதிதாக நியமனம் செய்கின்ற நடவடிக்கை எதையும் ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில், ஊழியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி தரக் கூடிய நடவடிக்கை ஒன்றை மெட்டா நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. இதுகுறித்து, ஊழியர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் வெளியிட்ட அறிக்கையில், “நமது குழுவில் ஏறக்குறைய 10 ஆயிரம் ஊழியர்களை குறைத்துக் கொள்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அத்துடன் இதுவரை நியமிக்கப்படாமல் இருந்த 5 ஆயிரம் பணியிடங்களை அப்படியே விட்டுவிடுவது என்று முடிவு செய்திருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.