பங்குனி உத்திரம் 2023 : நேரம், தேதி குறித்த தகவல்கள்…

by Editor News

2023 ம் ஆண்டில் பங்குனி உத்திர திருநாள் வருகின்ற ஏப்ரல் 05ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம். அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. ஆனால் இந்த பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு.

2023 ம் ஆண்டில் பங்குனி உத்திர திருநாள் வருகின்ற ஏப்ரல் 05ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல் 04ஆம் தேதி காலை 10.29 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 05ஆம் தேதி பிற்பகல் 12.09 மணி வரை உத்திரம் நட்சத்திரம் உள்ளது. முதல் நாளே உத்திரம் நட்சத்திரம் துவங்கி விட்டாலும், பெளர்ணமியும், உத்திர நட்சரத்திரமும் இணையும் நாளே பங்குனி உத்திரமாக கருதப்படுவதால் ஏப்ரல் 05 ம் தேதியே பங்குனி உத்திரமாக கணிக்கப்பட்டுள்ளது. அன்று பெளர்ணமி திதி காலை 10.17 துவங்கி, ஏப்ரல் 06 ம் தேதி காலை 10.58 வரை உள்ளது.

Related Posts

Leave a Comment