கோடைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் அனைவரும் அதிகமாக பழங்களை சாப்பிட ஆரம்பித்திருப்பீர்கள். அதிலும் சிட்ரஸ் நிறைந்த பழங்களை சாப்பிட்டால் வெயிலுக்கு நல்லது என சாப்பிடுவோம். அதில் முக்கியமான ஒன்று ஆரஞ்சுப் பழம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிட்ரஸ் பழமான ஆரஞ்சில், உடலின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் திறன் உள்ளது. இதோடு கொலாஜனை அதிகரிக்கவும், சரும பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது. 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 53.2 மில்லிகிராம் வைட்டமின் சி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பழத்தின் முழுமையான நன்மைகளைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
இதயத்திற்கு நல்லது:
இந்த ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி இருப்பதோடு நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதோடு ஆரஞ்சுப் பழத்தில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. இந்தப் பொட்டாசியம் இதயத்தின் சுவர்கள் தடிப்பதை தவிர்க்கிறது. எனவே ஆரஞ்சுப் பழத்தை அடிக்கடி எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது.
உடல் எடையை குறைக்கும்:
பூஜ்ஜிய கலோரி கொண்ட பழங்களில் ஒன்றாக உள்ளது ஆரஞ்சு. இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துகள் இருந்தாலும் தேவையற்ற கலோரிகளை எரிக்கும் சக்தி ஆரஞ்சிற்கு உள்ளது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் உங்களது அன்றாட உணவில் ஆரஞ்சை பழமாகவோ அல்லது ஜுஸாகவோ சாப்பிடலாம்.
இரத்தம் உற்பத்தி செய்கிறது:
செரிக்கும் சக்தியும், பசியையும், அதிகப்படுத்துவதுடன் புண் ஆன குடலை விரைந்து சரி செய்கிறது. அழிந்த திசுக்களைப் புதுப்பிக்கிறது. இரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்கிறது.
கர்ப்பமுற்ற பெண்களுக்கு நல்லது:
கர்ப்பிணிகள் இப்பழச் சாற்றை அதிக அளவில் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல் கருவில் உள்ள குழந்தையின் தோல் மற்றும் கண் பார்வை ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் சூட்டை குறைக்கும்:
பல்வலியை தீர்க்கும் அதிசய பழம். உடல் சூடு, வெட்டைச்சூடு, மூல வியாதி போன்றவற்றிற்கும், சிறு நீர் எரிச்சல், சிறுநீர்க் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.