திருவோணம் மற்றும் பங்குனி தேய்பிறை ஏகாதசி. இது “விஜயா” ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி.
இந்த விஜயா ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும். ‘இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது?’ என்று ஸ்ரீராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீராமர், சீதையை மீட்டு வந்தார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்.
தேதி, நேரம், திதி குறித்த தகவல்கள் :
பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி மார்ச் 17, 2023 அன்று மதியம் 2:06 மணிக்கு தொடங்கி, மார்ச் 18, 2023 அன்று காலை 11:13 மணிக்கு முடிவடையும். விரதம் இருக்கும் பக்தர்கள் மார்ச் 19 அன்று காலை 6:27 மணி முதல் முதல் 8:07 மணி வரை பரண என்றும் அழைக்கப்படும் விரதத்தை முறிப்பார்கள். பொதுவாக ஏகாதசி விரதத்தின் மறுநாள் சூரிய உதயத்திற்குப் பிறகுதான் ஏகாதசி பரணா செய்யப்படுகிறது.
பங்குனி தேய்பிறை ஏகாதசி ‘விஜயா’ ஏகாதசி எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை வழிப்பட்டால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம். வளர்பிறை ஏகாதசி ‘ஆமலகி’ எனப்படும். அப்போது விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும்.