இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

by Editor News

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.. மேலும், மாநிலத்தில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த எதிர்பாராத விதமாக மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை செய்தது. அவற்றை அப்பகுதி மக்கள் குவியல்களாக அல்லி எடுத்து உற்சாகத்துடன் விளையாடினர். திடீரென பெய்த ஆலங்கட்டி மழை அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழையும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், நம்பியூர், வடச்சூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் ரம்யமான சூழல் நிலவுகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவதானப்பட்டி மேல்மங்கலம, ஜெயமங்கலம், வடுகம்பட்டி, கைலாசபதி, லட்சுமிபுரம் போன்ற இடங்களிலும் லேசான சாரல் மழையில் தொடங்கி பின்னர் கனமழை பெய்தது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான முருகவலை, கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணியூரில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு , இரணியல், பூதப்பாண்டி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.

Related Posts

Leave a Comment