செயற்கை நுண்ணறிவு செய்தி சேனல்.. மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு ..

by Editor News

செயற்கை நுண்ணறிவு செய்தி சேனல் ஒன்று தொடக்கப்படும் என்றும், இந்த சேனல் 24 மணி நேரம் இயங்கும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதும் செயற்கை நுண்ணறிவு தற்போது அனைத்து துறைகளிலும் ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு சில ஒரு சில செய்தி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு செயலி மூலமே செய்திகளை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவால் இயங்கக்கூடிய ’நியூஸ் ஜிபிடி’ என்ற செய்தி சேனலை மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த செய்தி சேனல் 24 மணி நேரமும் இயங்க கூடிய அளவில் இருக்கும் என்றும் நடுநிலைத் தன்மையுடன் செய்திகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. செய்தி சேனலின் அடுத்த கட்டமாக இருக்கும் செயற்கை நுண்ணறிவால் இயங்கக்கூடிய செய்தி சேனலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment