முடி வளர்ச்சிக்கு டிப்ஸ் …

by Editor News

கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகவும் உகந்தது என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. கறிவேப்பிலையிலுள்ள அதிகளவான ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியில் பெரும் பங்களிப்பை செலுத்துகின்றன.

கறிவேப்பிலையை தலைக்கு தேய்ப்பது மட்டுமல்லாமல் உணவில் சேர்த்துக் கொண்டாலும் சிறந்த நன்மையளிக்கும். சரி இனி கறிவேப்பிலையை முடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்….

கறிவேப்பிலையை அரைத்து நெல்லிக்காய் அளவு உருட்டி தொடர்ந்து 40 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், முடி நன்றாக வளர்ச்சியடையும்.

கறிவேப்பிலையை துவையலாக செய்து வாரத்தில் இரண்டு தடவைகள் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு நிற்கும்.

கறிவேப்பிலையை காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தொடர்ந்து தேய்த்துவந்தால் முடி நன்றாக வளர்வதோடு, தலையில் உள்ள பொடுகும் குணமாகும்.

கறிவேப்பிலையை அரைத்து அடை போல தட்டி, காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தால் முடி செழுமையாக வளரும்.

கறிவேப்பிலையை காய வைத்து, அது நன்றாக காய்ந்ததும் அதனுடன் வெந்தயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை தலைக்கு தேய்த்து வந்தால், நரை பிரச்சினை நீங்கும்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து இரண்டு க்ளாஸ் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் இதனுடன் இந்துப்பு, சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடித்தால் முடி வளர்வதோடு, இளநரையும் சரியாகும்.

உலர்த்திய கறிவேப்பிலையுடன் சீரகம், சுக்கு, மிளகு, உப்பு என்பவற்றை பொடியாக்கி, சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் முடி நன்றாக வளரும்.

கறிவேப்பிலையை உண்பதால் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.

Related Posts

Leave a Comment