அர்த்த பூர்வோத்தானாசனம் என்னும் இந்த ஆசனத்தின் வடமொழி பெயரில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘பூர்வ’ என்றால் ‘கிழக்கு’, ‘உத்’ என்றால் ‘தீவிரம்’ (intense), ‘தான்’ என்றால் ‘நீட்டுவது’ (to stretch), ‘ஆசனம்’ என்றால் ‘நிலை’; அதாவது, பாதி கிழக்கு பகுதியை தீவிரமாக நீட்டும் நிலை. இந்த நிலையில் பார்ப்பதற்கு, ஒரு மேசை போலத்தான் இருக்கும். ஆங்கிலத்தில் Reverse Table என்பது சரியான பொருத்தமாகத் தெரியவில்லை. இந்த ஆசனத்தில் நிற்பது மணிக்கட்டு, கை, தோள், கால், தொடை என நான்கு கால்களும் பலமாகும். ஆனாலும், இதன் பலன் என்பது இடுப்பும், முதுகுத்தண்டு புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கி தள்ளப்பட்டு அதிலேயே நிற்பதனால் முதுகுத்தண்டு, முதுகு தசைகள், இடுப்பு மட்டுமல்ல, உடலின் முன் பகுதி (கிழக்கு பகுதி) உந்தப்படுகிறது. இதனால் அனைத்து உள் உறுப்புகளும் நன்றாக இயங்குகிறது. மேலும் இரத்த ஓட்டம் தலைக்கு நன்றாகப் பாய்ச்சப்படுகிறது. இந்த பலனுக்காகத்தான் நான்கு கால்களில் நிற்பது. கை, கால்களுக்கு கிடைக்கக் கூடிய
நுரையீரலை பலப்படுத்துகிறது. உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.
செய்முறை
விரிப்பில் கால்களை நீட்டி தண்டாசனம் நிலையில் அமரவும். கால் முட்டியை மடக்கி பாதங்களை தரையில் வைக்கவும். கைகளை புட்டத்திற்கு சில அங்குலம் பின்னால் தரையில் வைக்கவும். கை விரல்கள் உங்களை நோக்கியவாறு இருக்க வேண்டும். பாதங்களையும் கைகளையும் தரையில் அழுத்தி மூச்சை உள்ளிழுத்தவாறே இடுப்பை மேலே உயர்த்தவும். மார்பிலிருந்து கால் முட்டி வரை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். கைகள் நேராக இருக்க வேண்டும். மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், கணுக்கால்கள் கால் முட்டிக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும். தலையை பின்னால் சாய்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், உடலை தளர்த்தி தரையில் அமர்ந்து கால்களை நீட்டி தண்டாசனம் நிலையில் அமரவும்.இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முறை செய்ய வேண்டும்.
குறிப்பு
முதுகு, இடுப்பு, தோள், மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும். கழுத்து வலி உள்ளவர்கள் தலையை பின்னால் சாய்க்காமல் நேராக வைக்கவும்; அல்லது மார்பில் முகவாய் படுமாறு வைக்கவும். இடுப்பை முடிந்த அளவு மேலே உயர்த்தவும். பழகப் பழக நன்றாக உயர்த்த வரும்.