நம் அன்றாட வாழ்க்கையில் உட்கொள்ளும் கொண்டைக்கடலை ஏராளமான விட்டமின் மற்றும் சத்துகளை தன்னுள் கொண்டிருக்கிறது..
கொண்டைக்கடலையில் கருப்பு கொண்டைக்கடலை, வெள்ளை கொண்டைக்கடலை இரண்டுமே அதிக புரதங்களையும், சத்துக்களையும் கொண்டது.
கொண்டைக்கடலையில் இரும்பு சத்து, மக்னீசியம், புரதச்சத்து, விட்டமின் பி, நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்துகள் அதிகளவில் உள்ளது.
ஊற வைத்த கொண்டைக்கடலையை சாப்பிடுவது மாரடைப்பு நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
வெள்ளை கொண்டைக்கடலையை பொடி செய்து சாப்பிட்டு வர சிறுநீர் அடைப்பு, எரிச்சல் ஆகியவை குணமாகும்.
கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் கொண்டைக்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவாக இருக்கிறது.
கொண்டைக்கடலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் ஆகிய நோய்களுக்கு எதிரான எதிர்ப்புசக்தி கிடைக்கிறது.
இரும்புசத்து கொண்டைக்கடலையில் அதிகம் உள்ளது. அதனால் ரத்தசோகை உள்ளவர் இதை சாப்பிடுவது நல்லது.
கொண்டைக்கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு உறுதியை கொடுக்கும்.