தேவையான பொருட்கள் :
அதிகம் பழுக்காத நாட்டுத் தக்காளி – 5
பொட்டுக்கடலைமாவு – 50 கிராம்,
சோள மாவு – 25 கிராம்,
மைதா மாவு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் விழுது – அரை டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – சிறிதளவு,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
தக்காளியை கனத்த வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மைதா மாவு, உப்பு, சமையல் சோடா, மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளி வில்லைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சூப்பரான தக்காளி பஜ்ஜி ரெடி. குறிப்பு: தக்காளியில் இருக்கும் நீர் எண்ணெயில் சலசலப்பு உண்டாக்கும் என்பதால், மிதமான தீயில் மெதுவாக பொரித்தெடுக்கவும்.