லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க முயற்சி – பிரதமர் மோடி..

by Editor News

லடாக்கில் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க தனது அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

லடாக் பாராளுமன்ற தொகுதி எம்.பி. ஜம்யாங் செரிங், தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு 4.1 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சின்குன்லா சுரங்கப் பாதையை வருகிற 2025-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க ரூ.1,681.51 கோடி ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடியின் இந்த முடிவுக்கு லடாக்கின் பின் தங்கி பகுதியான ஜன்ஸ்கர் பகுதியில் உள்ள லுங்னக் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர்”என்று பதிவிட்டிருந்தார். ஜம்யாங் செரிங் எம்.பி.யின் இந்த ட்வீட்டை இணைத்து பிரதமர் மோடி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியதுள்ளதாவது,“ லடாக் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment