நடிகர் மயில்சாமி மறைவு : திரைப்பிரபலங்கள் இரங்கல்..

by Editor News

பிரபல நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான மயில்சாமி(57) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நடிகர் மயில்சாமியின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது!. திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக சமூக வலைதள பக்கங்களில் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்தவககையில் நடிகர் சரத்குமார், “எனது அன்பு நண்பரும், மிகச்சிறந்த மனிதரும், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும், சிறந்த விரிவுரையாளருமான அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது. அன்பு நண்பர் மயில்சாமி அவர்களை பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலைத்துறையினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா, “நகைச்சுவையான நடிப்பால் அனைவரையும் மகிழ்வித்தவன் பாசத்துக்குரியவன் திரு.மயில்சாமி. உன் மறைவு தமிழ் திரை உலகிற்கு பேரிழப்பாகும் ஆழ்ந்த இரங்கல்.” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பதிவில், “ உங்கள் இனிமையான வேடிக்கையான வழிகள் எப்போதும் நினைவில் இருக்கும். அன்பு மயில். ஆழ்ந்த இரங்கல்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது இரங்கல் குறிப்பில், “நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment