பன்னீர் நெய் ரோஸ்ட்

by Editor News

தேவையான பொருட்கள் வறுக்க:

தனியா – 2 1/2 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்- 12
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்

தேவையான பொருட்கள் :

பன்னீர் – 200 கிராம்
தயிர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
புளி – எலுமிச்சை அளவு
தனியா தூள் – அரை டீஸ்பூன்
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை

புளியை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும். கொத்தமல்லியை பொடியாகநறுக்கி கொள்ளவும். பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

காஷ்மீர் மிளகாவை 1மணி நேரம் சூடு தண்ணிரில் போட்டு ஊற வைக்கவும். வாணெலியில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக போட்டு பச்சை வாசனை போகும் வரை வறுத்து ஆற வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் ஊறவைத்த மிளகாய், வறுத்த தனியா, வெந்தயம், மிளகு, சீரகம், காஷ்மீர் மிளகாய், கடுகு, 1 1/2 தயிர், புளிக்கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.

வாணெலியில் நெய்யை ஊற்றி சூடானதும் பன்னீரை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். வாணெலியில் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அரைத்த வைத்த பேஸ்டை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தேவையான உப்பு சேர்த்து 3 ஸ்பூன் நெய் ஊற்றி 5 நிமிடம் நன்றாக கிளற வேண்டும். பின் தனியா தூள், கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.

அத்துடன் வறுத்த பன்னீர் சேர்த்து பொறுமையாக கிளற வேண்டும். கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பன்னீர் நெய் ரோஸ்ட் ரெடி.

Related Posts

Leave a Comment