283
தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட கறுப்பு போராட்ட வாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கே இந்த விசேட கூட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த கூட்டத்திற்கு சுமார் 30 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானம் பெறுவோரிடம் இருந்து 6% முதல் 36% வரை வரி அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது