கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

by Editor News

கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள மருத்துவமனை மீது உக்ரைன் இராணுவம் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதோடு 24 நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் காயமடைந்தனர் என்றும் அறிவித்துள்ளது.

சனிக்கிழமை நடந்த இந்த தாக்குதல் குறித்த ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு உக்ரைனில் இருந்து எந்த பதிலும் இதுவரை வெளியாகவில்லை.

இதேநேரம் இந்தத் தாக்குதல், அமெரிக்கா வழங்கிய ஹிமார்ஸ் ரொக்கெட் ஏவுதளத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த தக்குதல் உக்ரைன் அரசாங்கத்தின் கடுமையான போர்க்குற்றம் என்றும் இதற்கு அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment