மூலிகை டீ பருகுவதால் என்னென்ன நன்மைகள்?

by Editor News

புத்துணர்ச்சியுடன் இருக்க டீ காபி ஆகியவற்றை குடிக்க நாம் அனைவரும் பழகிவிட்டாலும் மூலிகை டீ குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்

குறிப்பாக குளிர்காலத்தில் சூடான மூலிகை டீ குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருப்பதாகவும் குறிப்பாக சளி இருமலை எதிர்த்து இந்த மூலிகை டீ போராடும் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

இஞ்சி மஞ்சள் இலவங்கம் பட்டை ஆகியவை கலந்த டீ பருகுவதால் மூக்கின் வீக்கம் குறைந்து சுவாசத்திற்கு இதம் அளிக்கும் என்றும் சளி இருமல் போன்ற அறிகுறிகளை விரட்டி விடும் என்றும் கூறுகின்றனர்.

மேலும் ஜீரணமாகாத உணவு சாப்பிடும்போது மூலிகை டீ குடிப்பது நல்லது என்றும் இஞ்சி டீ புதினா சோம்பு ஆகியவற்றை பருகினால் உடல் பாதிப்புகளை தடுக்க உதவும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

எனவே சாதாரண டீ காபி குடிப்பதை விட மூலிகை டீ குடித்தால் உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது

Related Posts

Leave a Comment