பிரபல நடிகரும் இயக்குனரும் நடிகருமான பார்த்தீபன் பிச்சை எடுத்த காட்சிகள் வைரலாக பரவி வருகின்றது.
நடிகர் பார்த்தீபன்
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் புதிது புதிதாக யோசித்து பல முயற்சி செய்பவர் பார்த்தீபன்.
80மற்றும் 90களில் சுப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த பார்த்திபன் 2022ஆம் ஆண்டு இரவின் நிழல், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் பார்த்திபன் தன் நடிப்பு, இயக்கம் இரண்டிலும் அதீத வெற்றிகளை குவித்து வருகிறார்.
இவரின் புது முயற்சிகள் எப்போதும் தோற்றதில்லை என்பதற்கு ஆதாரமாக ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு ஏகப்பட்ட விருதுகளும் இறுதியாக வெளிவந்த இரவின் நிழல் திரைப்படத்திற்கும் கிடைத்த வரவேற்பே போதுமானது.
பிச்சை எடுத்த பார்த்தீபன்
இந்நிலையில், சினிமாவைப் போல வித்தியாசமாக யோசித்து சிறைவாசிகளுக்காக பிச்சை எடுத்திருக்கிறார்.
சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 6ஆம் திகதி 46 ஆவது சர்வதேச புத்தக கண்காட்சி ஆரம்பமாகியிருந்தது. இக்கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிலையில் புத்தக கண்காட்சிக்கு வந்த நடிகர் பார்த்தீபன் சிறைவாசிகளுக்காக புத்தகத்தை மடிப்பிச்சையாக கேட்டு ஒவ்வொரு அரங்காக சென்று புத்தகங்களை சேகரித்துள்ளார்.
சிறைவாசிகளுக்காக பார்த்தீபன் செய்த இந்த செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இச்செயலைப்பார்த்து மக்கள் இவரை பாராட்டி வருகின்ற தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது.