மகாராஷ்டிராவில் தினந்தோறும் 1 கோடி முட்டைகளுக்கு தட்டுப்பாடு …

by Editor News

மகாராஷ்டிராவில் தினந்தோறும் 2.25 கோடி முட்டைகள் உட்கொள்ளப்படுகின்றன. ஆனால் மாநிலத்தின் தினசரி முட்டை உற்பத்தி 1 கோடி முதல் 1.25 கோடி என்ற அளவில்தான் உள்ளது. இதனால் தினந்தோறும் 1 கோடி முட்டைகள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனையடுத்து தேவை பூர்த்தி செய்வதற்கான திட்டத்தை அரசு வகுத்து வருகிறது என்று கால்நடை பராமரிப்புத் துறையின் ஆணையர் டாக்டர் தனஞ்சய் பர்கலே தெரிவித்தார்.

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 டிசம்பர் 8 முதல் 2023 ஜனவரி 12 வரை தயாரிக்கப்பட்ட 17,362 வாகனங்கள் திரும்ப பெறப்படுகிறது. இந்த வாகனங்களில் தேவைப்பட்டால், ஏர்பேக் கன்ட்ரோலரை (பாதிக்கப்பட்ட பகுதி) இலவசமாக பரிசோதிக்கவும், மாற்றவும் திரும்ப பெறுதல் மேற்கொள்ளப்படுகிறது. அல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, பலேனோ, எக்கோ, பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய மாடல் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார மன்றம் தனது தலைமை பொருளாதார நிபுணர்கள் அவுட்லுக் ஆய்வில், இந்த ஆண்டு உலகளாவிய மந்தநிலை ஏற்படக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், உணவு, எரிசக்தி மற்றும் பணவீக்கத்தின் மீதான அழுத்தங்கள் உச்சத்தை எட்டக்கூடும். எவ்வாறாயினும், வங்கதேசம் மற்றும் இந்தியா உள்பட தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள சில பொருளாதாரங்கள் (நாடுகள்) சீனாவிலிருந்து விலகி உற்பத்தி விநியோக சங்கிலிகளில் பல்வகைப்படுத்தல் போன்ற உலகளாவிய போக்குகளால் பயனடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராண்ட் மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் பைனான்ஸ் அறிக்கையின்படி, 2023 குளோபல் டாப் 500 பிராண்ட் மதிப்பு நிறுவனங்களின் பட்டியலில், ஆப்பிள் நிறுவனத்தை இரண்டாவது இடத்துக்கு தள்ளி அமேசான் முதலிடத்தை பிடித்துள்ளது. நம் நாட்டை சேர்ந்த டாடா குழுமம் இந்த பட்டியலில் 78வது இடத்தில் இருந்து 69 இடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்போசிஸ் நிறுவனம் 158வது இடத்தில் இருந்து 150 இடத்துக்கு உயர்ந்துள்ளது.

Related Posts

Leave a Comment