நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(செவ்வாய்கிழமை) பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, மற்றும் வட மேல் மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யலாம் எனவும் தென் மாகாணத்தில் காலை வேளையில் மழை பெய்யலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.