கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் கைப்பற்றுவதற்கு அதன் படைகள் நெருங்கி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
எனினும், கடந்த 24 மணி நேரத்தில் சோலிடருக்கான போரில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்ததாக உக்ரைனின் டொனெட்ஸ்க் ஆளுனர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.
டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர் சமீபத்திய மாதங்களில் நல்ல போர்க்கள உத்திகளுடன் களமிறங்கிய ரஷ்யாவுக்கு சோலிடர் ஒரு நல்ல பரிசாக அமைந்துள்ளது.
இந்த முன்னேற்றம், உக்ரைனிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தின் மற்ற பகுதிகளை, குறிப்பாக அருகிலுள்ள மூலோபாய நகரமான பாக்முட்டை கைப்பற்ற ரஷ்ய துருப்புகளுக்கு ஊக்கமளிக்கும்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்ய துருப்புக்களின் தன்னலமற்ற மற்றும் தைரியமான நடவடிக்கையை பாராட்டினார். இது சோலேடரில் முன்னேற அவர்களுக்கு உதவுவதாக அவர் கூறினார்.