டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால், பிஎஸ்-3 வகை பெட்ரோல் வாகனங்கள் மற்றும் பிஎஸ்-4 வகை டீசல் வாகனங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை குறைந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் காற்று மாசுபாடு நேற்று கடுமையாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அனைத்து தேசிய தலைநகரப் பகுதி மாநிலங்களுக்கும் காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் பெட்ரோலில் இயங்கும் பிஎஸ்-3 வகை வாகனங்கள் மற்றும் டீசலில் இயங்கும் பிஎஸ்-4 வகை வாகனங்களுக்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும், வெள்ளிக்கிழமை வரை இந்தத் தடை உத்தரவு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காற்று மாசுபாடு குறைந்தால், வெள்ளிக்கிழமைக்குப் பிறகு தடை விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.