பொகவந்தலாவ எலிப்படை பகுதியில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது ..

by Editor News

நோர்வூட் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பொகவந்தலாவ எலிப்படை 12ஆம் இலக்க தேயிலை மலை காணிப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவர் தப்பி சென்று தலைமறைவாகியுள்ளாரென ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது சம்பவமானது நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்றதாக ஹட்டன் பொலிஸின் குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகரும், பொறுப்பதிகாரியுமான பிரேமலால் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு தொடர்பாக அட்டன் குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலுக்கு ஏற்ப, மேற்படி சுற்றிவளைப்பின் போதே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களால் மாணிக்ககல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் அட்டன் குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட அனைவரும் பொகவந்தலாவ எலிப்படை கீழ் பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அட்டன் பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

Related Posts

Leave a Comment