பாகிஸ்தானில் காணப்பட்ட UFO? தெருவிளக்கு UFO ஆனது எப்படி ..

by Editor News

UFO எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் உலகின் பல்வேறு மூலைகளிலும் காணப்படுவதைப் பற்றிய அரைகுறையான கதைகளை நாம் அவ்வப்போது செய்தியாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் பாகிஸ்தானில் 2023 ஆம் ஆண்டுக்குள் நுழைந்த சில நாட்களில் லாகூரில் UFO ஒன்று காணப்பட்டதாக புகைப்படத்தை பலர் பகிர்ந்துள்ளனர்.

புகைப்படத்தைப் பகிர்ந்த ஒரு ட்விட்டர் பயனர் குறிப்பிட்டுள்ளதாவது, லாகூரில் UFO காணப்பட்டது. பூகம்பம் ஏற்பட்ட நேரத்தில் UFO காணப்பட்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 4 பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பஞ்சாபின் பல நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையம் லாகூரிலிருந்து 34 கிமீ மேற்கிலும், ஷேகுபுராவிற்கு மேற்கே 12 கிமீ தொலைவிலும் பதிவாகியுள்ளது.

ஆனால், இந்த UFO ஆனது லாகூரில் உள்ள தெருவிளக்கின் புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் பனியின் மத்திய எறியும் தெருவிளக்கின் புகைப்படத்தை UFO போன்று காட்சியளிக்கும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment