கோதுமையில் அல்வா ரெசிபி இதோ …

by Editor News

திடீரென ஏதாவது ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் இந்த கோதுமை அல்வா உங்களுக்கு கைக்கொடுக்கும். பலரது வீட்டில் சப்பாத்திக்காக கோதுமை ஸ்டாக் வைத்திருப்பீர்கள். வெல்லமும் இருக்கும். இந்த இரண்டு முக்கிய பொருட்கள் இருந்தாலே 15 நிமிடத்தில் இந்த கோதுமை அல்வாவை செய்துவிடலாம். எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான ரெசிபி இதோ…

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்

வெல்லம் – 1 கப்

முந்திரி – 10

நெய் – 3/4 கப்

தண்ணீர்- 3 கப்

ஏலக்காய் பொடி – தே.அ

செய்முறை :

முதலில் 3 கப் தண்ணீரை கடாயில் ஊற்றி வெல்லத்தை உருக்கிக்கொள்ளவும். பின் வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக அடி கணமாக இருக்கும் கடாய் வைத்து எண்ணெய் கொஞ்சம் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

மீதமிருக்கும் நெய்யை ஊற்றி பின் கோதுமை மாவு ஊற்றி நன்கு கிளற வேண்டும். மாவு கருகாமல் இருக்க வேண்டும்.

மாவு சிவந்து வாசனை வரும். அந்த சமையத்தில் வடி கட்டி வைத்துள்ள வெல்ல நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவேண்டும். மாவு கட்டிகளாக மாறும்போது உடைத்துவிட்டு கலக்குங்கள்.

நன்கு கலக்கிய பின் மாவு கடாயில் ஒட்டாமல் தளதளவென மாறும். அந்த சமயத்தில் ஏலக்காய் தூவி கிளறவும். பின் முந்திரியும் சேர்த்து கலக்கவும்.

அவ்வளவுதான் வாயில் வைத்தாலே கரையும் அல்வா தயார்.

Related Posts

Leave a Comment