20 கோடி ட்விட்டபயனாளிகளின் இமெயில் ஐடி திருட்டு.. எலான் மஸ்க் அதிர்ச்சி …

by Editor News

20 கோடி ட்விட்டர் பயனாளிகளின் இமெயில் ஐடியை மர்ம நபர்கள் ஹேக்கர்கள் மூலம் திருடி உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி டிவிட்டர் சிஇஓ எலான் மஸ்க் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் 44 பில்லியன் டாலர் கொடுத்து எலான் மஸ்க் வாங்கினார் என்பதும் அதன் பின் அவர் நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் 20 கோடி டுவிட்டர் பயனாளர்களின் இமெயில் முகவரிகளை ஹேக்கர்கள் திருடி அவற்றை ஆன்லைன் தளத்தில் வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் எலான் மஸ்க் சி.இ.ஓவாக பதவி ஏற்பதற்கு முன்பே இந்த திருட்டு நடந்துள்ளதாகவும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் யார் என்பதை கண்டறியும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

20 கோடி டுவிட்டர் பயனாளர்களின் இமெயில் முகவரி திருடப்பட்டதாக வெளிவந்த செய்தி, டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவிற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது .

Related Posts

Leave a Comment