342
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த புத்தகக் கண்காட்சிகளுக்கு சென்னை மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் 46 ஆவது புத்தக கண்காட்சியை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மாலை இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
இன்று முதல் பதினேழு நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறும் என்றும் சுமார் 6000 அரங்குகளில் புத்தக கண்காட்சிக்காக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரைபொதுமக்களுக்கு அனுமதி உண்டு என்றும் மாணவ மாணவிகளுக்கு கட்டணத்தில் சலுகை உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.