டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவ தயார்: மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா …

by Editor News

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் முக்கிய ஆலோசனை செய்யப்பட்டதாகவும் அதாவது இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு மைக்ரோசாப்ட் உதவி செய்வது குறித்து பேசப்பட்டது.

மேலும் இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்னும் அதிக முதலீடு செய்ய பிரதமர் மோடி சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டதாகவும் இதனை பரிசீலனை செய்வதாக சத்ய நாதெல்லா கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

இந்த நிலையில் பிரதமர் மோடி சந்திப்புக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு மைக்ரோசாப்ட் உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ஏற்கனவே இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில் மைக்ரோசாப்ட் உதவியால் அது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment