சீரியல் இயக்குனர்களில் பல விதமாக இருப்பர். டப்பிங் கதைகளை இயக்குபவர்கள், வேறொரு எழுதும் கதையை இயக்குபவர் அல்லது சொந்தமாக கதை எழுதி அதை தானே இயக்குபவர்களும் உண்டு.
அப்படி சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக இருப்பவர் திருச்செல்வம்.
ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்த வந்த இவர் பிறகு தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றி இருக்கிறார்.
இப்போது முழுவதும் சின்னத்திரையிலேயே பணியாற்றுகிறார். 2002ம் ஆண்டு ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் இணை இயக்குனராகவும் பணிபுரிந்த இவர் கோலங்கள், அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற தொடர்களை இயக்கியிருக்கிறார்.
எதிர்நீச்சல் தொடர் :
இப்போது பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எதிர்நீச்சல் என்ற தொடரை திருச்செல்வம் இயக்க மக்கள் மத்தியில் பெரிய ஆதரவை பெற்று வருகிறது. இந்த தொடர் குறித்து இயக்குனருக்கு ஒரு கடிதம் வந்ததாம், அதுகுறித்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அந்த கடிதத்தில் ஒருவர், எதிர்நீச்சல் தொடரை தயவுசெய்து நிறுத்துங்கள், 9.30 மணி ஆனது எனது மனைவி தொடரை பார்த்துவிட்டு என்னை குணசேகரனாகவும் அவளை ஜனனியாகவும் நினைத்து கொண்டு அவளது நடவடிக்கை மொத்தமாக மாறி வருகிறது என்று குறிப்பிட்டிருந்தாராம்.
இதுபோல் பல விமர்சனங்கள் வர தான் செய்யும், ஆனால் நான் சீரியலை நிறுததப்போவதில்லை என திருச்செல்வம் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.