நீலகிரியில் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் மனிதர்களுக்கு பாதிப்பா .!

by Editor News

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு பன்றிகளுக்கு பரவி வரும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் மனிதர்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் அச்சபட தேவையில்லை என மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து இறந்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் சுற்றி திரிந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. இதனை தொடர்ந்து உயிரிழந்த பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கபட்டு ஆய்வுக்கு அனுப்பியதில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் காரணமாக இறந்திருப்பது உறுதியானது.

இதனையடுத்து புலிகள் காப்பகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு உள்ள நிலையில், உதகை மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் செய்தியளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது கூறிய அவர், “முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு பன்றிகளுக்கு பரவி வருவது ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் என்று தெரிய வந்திருக்கிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் அச்சபட தேவையில்லை. மேலும் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள வளர்ப்பு பன்றி பண்ணைகளை கண்காணிக்க உத்தரவிடபட்டுள்ளது. மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறோம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில் மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் குறித்து மத்திய கால்நடை பராமரிப்பு துறை காணொளிகாட்சி மூலம் ஆலோசனை நடத்தப்படவுள்ளது” என தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment