கற்கண்டு பொங்கல் செய்வது எப்படி ..

by Editor News

தேவையான பொருட்கள் :

அரிசி -1 கப்
பால் – 2 கப்
தண்ணீர்- 1 கப்
அரைத்த கற்கண்டு – 4 கப்
முந்திரி- 3
நெய்- 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை
பேரீச்சம்பழம் – 3

செய்முறை :

முதலில் ஒரு பானையில் பால் ஊற்றி, தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதித்ததும் அரிசியை சேர்த்து குழைந்து வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

அரிசி வெந்ததும் அதில் அரைத்த கற்கண்டு சேர்த்து நன்கு கிளரிக் கொள்ளவும். பின் 3 நிமிடங்கள் வேக விட்டு இறக்கிக் கொள்ளவும்.

இறுதியில் நெய்யில் முந்திரி, பேரீச்சம்பழம் மற்றும் ஏலக்காய் பொடி போன்றவற்றை வறுத்து, பொங்கலில் சேர்த்து இறக்கினால் சுவையான கற்கண்டு பொங்கல் ரெடி.

Related Posts

Leave a Comment