பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு 5 லட்சமாக அதிகரிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .
தற்போது 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உள்ளது. இந் நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் மீட்டினால் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கவும் வருமான வரி வழக்கில் மாற்றங்களை செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த நம்பிக்கையான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
வருமான வரி விலக்கு வரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த அதிக வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.