தாம்பரம் – அசாம் இடையே சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு

by Editor News

சென்னை தாம்பரத்தில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள புது தின்சுகியா என்ற நகர் வரை செல்லும் சிறப்பு ரயில் விரைவில் இயக்கப்பட இருக்கும் நிலையில் அந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று அதிகாலை முதல் தொடங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலும் மகா சங்கராந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இந்த நிலையில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து அசாம் மாநிலம் தின்சுகியா ரயில் நிலையம் வரை ஜனவரி 8ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என சமீபத்தில் தென்னிந்திய ரயில் அறிவித்தது.

இந்த ரயில் ஜனவரி 8ஆம் தேதி 10:45 க்கு புறப்பட்டு தின்சுகியா நகருக்கு ஜனவரி 10ஆம் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு செல்லும். இந்த நிலையில் இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று அதிகாலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Related Posts

Leave a Comment