சீனாவில் கோடிகணக்கில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும் அதே போல் லட்சக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள் என்றும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சீனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டது. இதனையடுத்து சீனாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளதாகவும் ஆனால் சீனா உண்மை தகவலை தர மறுப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை மற்ற நாடுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எனவே ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும் சீனா எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
சீனா தங்கள் நாட்டில் உள்ள பாதிப்பு குறித்த உண்மைத் தகவலை உடனே கூற வேண்டும் என்றும் அப்போது தான் உலக நாடுகள் மட்டும் உலகம் ஆதார அமைப்பு அந்நாட்டிற்கு உதவி செய்ய முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது .