கிறிஸ்மஸ் விடுமுறைக்குப் பின்னர் இந்த வாரம் வேலைக்குத் திரும்பும் மக்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
ஜனவரி 3-4 மற்றும் 6-7 திகதிகளில் இரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்க உறுப்பினர்களின் வெளிநடப்புகளும், ஜனவரி 5ஆம் திகதி அஸ்லெஃப் ஓட்டுநர்களின் வெளிநடப்புகளும் சேவைகளை குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கும் என்று நெட்வொர்க் ரெயில் தெரிவித்துள்ளது.
இரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்க உறுப்பினர்கள் ஊதியம், வேலை பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான சர்ச்சையில் சலுகைகளை நிராகரித்துள்ளனர்.
அஸ்லெஃப் தொழிற்சங்கத்தில் உள்ள 15 ரயில் நிறுவனங்களில் ரயில் ஓட்டுநர்கள் ஊதியம் கேட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தங்களின் கலவையானது சுமார் 20 சதவீத சேவைகளை மட்டுமே இயக்கும், பல பகுதிகளில் இரயில்கள் எதுவும் இல்லை.
வேலைநிறுத்தங்களால் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் சேவைகள் பாதிக்கப்படலாம்.