சஃப்ட் சப்பாத்தி செய்ய இந்த 6 முறைகளை கடைபிடித்தாலே போதும். சப்பாத்தி ரெம்ப சாஃப்ட்டாகவும் வாயில் போட்டவுடனேயே கரையும் வகையிலும் இருக்கும்.
1. முதலில் தேவையான அளவிற்கு கோதுமை மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
2. இந்த மாவுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இதனால் சப்பாத்தி சுடும் பொழுது ஆங்காங்கே பிரவுன் நிறத்துடன் பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் நன்றாக வெந்து வரும்.
3.மாவு பிசையும் போது கவனமாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவு பிசைந்த பிறகு அவற்றின் மீது எண்ணெய் ஊற்றி தடவிக் கொள்ள வேண்டும்.
4. இப்போது பிசைந்த மாவை அப்படியே விட்டு ஒரு ஈரத் துணியில் காற்று புகாதவாறு மூடி வைத்துக் கொள்ளவும்.
5. குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து அதன் மீது கொஞ்சமாக கோதுமை மாவை தூவி உருண்டைகள் பிடித்து கொள்ள வேண்டும்.
6. பிறகு அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக வைத்து மாவை வட்டமாக தேய்த்து கல்லில் சுட்டு எடுத்தால் நீங்கள் எதிர்பார்த்த சாஃப்டான மற்றும் வாயில் போட்டதும் கரையும் சப்பாத்தி தயாராக இருக்கும்.