கொரோனா சமயத்தில் பணியமர்த்தப்பட்ட எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகத்தை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவலின் போது லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன் , பலர் உயிரிழந்தனர். இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா காலத்தில் மருத்துவத்துறையில் காலி பணியிடங்களை துரிதமாக செயல்பட்டு அரசு நிரம்பியது. நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்ததால் ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்டவர்கள்.
இந்நிலையில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காலத்தில் ஆறு மாத காலத்துக்கு பணி நியமனம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியர்கள் மீண்டும் பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்து சூழலில் தற்காலிக அரசு செவிலியர்களுக்கு பணி நீடிப்பு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாதம் ரூ.14 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே அடுத்தடுத்து பணிக்காலம் நீடிக்கப்பட்ட நிலையில் பணிக்காலம் நேற்று முடிவடைந்த நிலையில் மீண்டும் பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.