சீனாவின் தற்போதைய தொற்று விவரங்கள் தேவை – உலக சுகாதார அமைப்பு …

by Editor News

சீனாவின் தற்போதைய கொரோனா தொற்று பரவல் பற்றிய விரிவான தகவல்கள் தங்களுக்கு தேவை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவிலும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துவருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பில் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். சீனாவில் கொரோனா பரவலின் எழுச்சி உலக சுகாதார அமைப்பை கவலை கொள்ள செய்துள்ளதாக கூறினார்.

மேலும், சீனாவில் தொற்று பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும், எனினும் தொற்றுநோய் நிலைமை குறித்து விளக்க சீனா இன்னும் முன்வர வேண்டும் என்றும் கூறினார். சீனாவில் தற்போதை தொற்று பரவல் குறித்து விரிவான தகவல்கள் தங்களுக்கு தேவை என்றும், தொடர்ந்து கண்காணிக்கவும், அதிக ஆபத்துள்ளவர்களுக்கு தடுப்பூசி போடவும் சீனாவை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார அமைப்பின் பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து எங்கள் ஆதரவை நாங்கள் சீனாவுக்கு வழங்குவோம் என்றும் டெட்ரோஸ் அதானோ கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment