பிரதமர் மோடி தாயார் மறைவு – குஜராத் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் …

by Editor News

பிரதமரின் தாயார் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று குஜராத் செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நிலை குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 100. கடந்த 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாயாரின் மறைவு செய்தியை அறிந்த மோடி குஜராத் விரைந்த நிலையில் அவரின் இறுதி சடங்கில் பங்கேற்று, சிதைக்கு தீ மூட்டினார். தாயை இழந்து வாடும் மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, இன்று மாலை குஜராத் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி உங்கள் அன்புக்குரிய தாய் ஹீராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. நான் மிகவும் வருந்துகிறேன், உங்கள் இழப்புக்காக நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் நீங்கள் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள்” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment