பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் இறுதி சடங்குகளுக்கு பின் தகனம் செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராவின் உடல்நிலை குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 100. கடந்த 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரு புகழ்பெற்ற 100 ஆண்டு சகாப்தம் இறைவனின் திருவடியில் இளைப்பாறுகிறது என்று தனது அம்மாவின் மறைவு குறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் தகனம் செய்யப்பட்டது. தனது தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்திய மோடி, பின்னர் அவரின் உடலுக்கு தீ மூட்டினார்.
#WATCH | Gujarat: Heeraben Modi, mother of PM Modi, laid to rest in Gandhinagar. She passed away at the age of 100, today.
(Source: DD) pic.twitter.com/wqjixwB9o7
— ANI (@ANI) December 30, 2022