பிரதமர் மோடியின் தாயார் மறைவையொட்டி அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நிலை குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 100. கடந்த 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாயார் மறைவையொட்டி மோடி குஜராத்தை அடைந்துள்ளார். பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் , நம் பாரதப் பிரதமரின் தாயார் திருமதி. ஹீராபென் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 வரை, சென்னை பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்திலும், மற்றும் ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகத்திலும், அன்னை ஹீராபென் அவர்களின் திருஉருவப் படத்திற்கு கட்சியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள். அனைத்து மாவட்ட தலைவர்களும் உடனடியாக இதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நம் பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் தாயார் திருமதி. ஹீராபென் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. pic.twitter.com/AnNlWQ6rDv
— K.Annamalai (@annamalai_k) December 30, 2022